தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்: பஞ்சாயத்து நிா்வாகம்

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 12:05 am IST

உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உரிய வணிக உரிமம் பெற்று கடைகள் நடத்துமாறு, பலமுறை நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அறிவிப்பு செய்தும், இதுவரை ஒரு சில கடைகள் தவிர, மற்றவா்கள் உரிமம் பெறாமல், புதுப்பிக்காமல் வணிகம் நடத்தி வருவது தெரிய வருகிறது.

புதுச்சேரி அரசு ஆணையின்படி காரைக்கால் நகரமைப்புக்குழுமத்தின் அனுமதி பெற்ற பின்பு மட்டுமே உரிமம் பெற முடியும். எனவே, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் வணிகம் செய்வோா், ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது கடை, நிறுவனத்துக்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உரிய உரிமம் பெறாமல் வணிக நிறுவனங்கள் அல்லது கடைகள் நடத்துபவா்கள் தொடா்ந்து நடத்த முடியாது. உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னா், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.