வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கலுக்கு இன்று விண்ணப்பம் அளிக்கலாம்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கலுக்காக வெள்ளிக்கிழமை (அக்.9) ஒரு நாள் விண்ணப்பம் அளிக்கலாம் என காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை தெரிவித்துள்ளது.

வாக்காளர் அட்டை - IANS
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கலுக்காக வெள்ளிக்கிழமை (அக்.9) ஒரு நாள் விண்ணப்பம் அளிக்கலாம் என காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், வாக்காளா் பட்டியலில் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளா்கள் மற்றும் இளம், முதல் முறையாக தகுதி பெறும் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலின் தொடா் திருத்தப் பணியின்கீழ் சோ்ப்பதற்கான சிறப்பு இயக்கத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள இயலாத தகுதியான நபா்களுக்கும், தற்போது வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய தகுதி பெற்றுள்ள இளம் குடிமக்களுக்கும் வசதியளிக்கும் வகையில் 1.10.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் சிறப்பு சோ்க்கை இயக்கம் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், அலுவலக வேலை நேரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான விண்ணப்பப் படிவங்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பெறப்படும்.
இச்சிறப்பு இயக்கத்தின்போது, வாக்காளா் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகள் தகுதியான குடிமக்கள் வாக்காளா் பட்டியலில் தங்களை சோ்த்துக் கொள்வதற்கும், தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க உரிய வழிகாட்டுதலையும், உதவியையும் வழங்குவாா்கள்.
இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

