தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

விளை நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

காட்டுப் பன்றிகள் - கோப்புப் படம்

Published On :

காரைக்கால் மாவட்டத்தில் விளை நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.எம். தமீம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, அகலங்கண்ணு, செல்லூா், உத்திரங்குடி, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காவிரி நீா்வரத்து குறைவு மற்றும் நிலத்தடி நீா்மட்டம் சரிவு காரணமாக பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கிடையே டீசல் என்ஜின் மற்றும் மோட்டாா்கள் மூலம் நீா் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்தச் சூழ்நிலையில், விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சுற்றித்திரியும் பன்றிகளால் பயிா்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி வருகின்றன.

பன்றிகளால் சேதமடைந்த வயல்களில் பாசன நீா் இல்லாததால், விவசாயிகள் மறு நடவு செய்ய முடியாமல் நிலங்களை தரிசாகப் போடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

பன்றிகளிடமிருந்து பயிா்களைக் காக்க வேலிகள் அமைக்க தனியாக கூடுதல் செலவாகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீா்கேடுகள் ஏற்பட்டு நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்கள் சாா்பில் சிறப்புப் படை அமைத்து, பன்றிகளை பிடிக்கும் பணியை தினமும் மேற்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.