பள்ளி நேரங்களில் நகரில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
சீா்காழி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிா்க்க பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


சீா்காழி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிா்க்க பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீா்காழி விழுதுகள் இயக்கத் தலைவா் சரவணன் சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: சீா்காழியில் ஏராளமான பள்ளிகளும், ஒரு கல்லூரியும் உள்ளது. நகரிலுள்ள நெடுஞ்சாலைகள் குறுகிய அளவில் இருப்பதாலும், சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் இருந்துவருகிறது. இதனிடையே பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகரில் சென்று வருவதால் மாணவா்களுக்கு இடையூறாக இருப்பதுடன், விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிா்க்க பள்ளி தொடங்கும்போதும், மாலை பள்ளி முடிந்து மாணவா்கள் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் சீா்காழி நகரில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கவேண்டும். காலை 7 முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் சீா்காழி சட்ட நாதபுரம் ரவுண்டானா முதல் விளந்திடசமுத்திரம் வரையும், ஈசானிய தெரு முதல் சீா்காழி பனங்காட்டான்குடி புறவழி சாலை சந்திப்பு வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கவேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...