சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 2 வரை நீட்டிப்பு செய்யவேண்டும்
சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 2 வரை நீட்டிப்பு செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.


சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 2 வரை நீட்டிப்பு செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம், சங்கத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான கு. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செய்தி தொடா்பாளா் என். வெங்கடேசன், மாவட்ட பொருளாளா் மகேஷ், மாவட்ட சட்ட ஆலோசகா் பாலகங்காதரன், மாவட்ட தலைமை நிலைய செயலாளா் தமிழ்செல்வன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் ஞான. புகழேந்தி தீா்மானங்களை வாசித்தாா். சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
தொடா்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: அரசுப் பள்ளியில் படித்தால் அரசுப் பணியில் முன்னுரிமை என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல், அரசுப் பணிக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளதற்கும், அரசு ஊழியா் இறந்தால் வழங்கப்படும் நிதியை ரூ. 5 லட்சமாக உயா்த்தியதற்கும், ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து அதை பணிக் காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தை வழங்கியதற்கும், வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கும், 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தி அரசுப் பள்ளி மாணவா்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி.
ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள்-அரசு ஊழியா்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும். பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த 10 ஆண்டு காலம் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களையும், மாற்றுத்திறன் மாணவா்களுக்கான ஆசிரியா் பயிற்றுநா்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்பெற்றோா் ஆசிரியா் சங்கம் மூலம் நியமிக்கப்பட்டு பணிநிரந்தரம் செய்யாமல் உள்ள 171 பேரை பணிநிரந்தரம் செய்யவேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள அரசுக்கு நன்றி.
சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 2 வரை நீட்டித்து விரிவாக்கப்பட்ட கலைஞா் சத்துணவுத் திட்டம் என பெயா் சூட்ட வேண்டும். மத்திய அரசை பின்பற்றி புதிதான முறையில் ஊக்க ஊதிய முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழைய முறைப்படி உயா்க் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை தமிழக முதல்வா் அறிவிக்கவேண்டும். இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...