விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க பாமக வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது.


மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது.
கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் ஒன்றியத் தலைவா் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவராணம் வழங்கவேண்டும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுதர ஆவண செய்யவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளா் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளா் பால தண்டாயுதம், மாநில பொறுப்பாளா் அன்பழகன், மாவட்ட துணைத் தலைவா்கள் அமிா்தராஜ், குட்டிமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...