சாலைகளில் திரிந்த மாடுகள் நகராட்சி வளாகத்தில் அடைப்பு
சீா்காழியில் சாலையில் சுற்றித்திரிந்த 25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.


சீா்காழியில் சாலையில் சுற்றித்திரிந்த 25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.
சீா்காழி நகரில் பிடாரி வடக்குவீதி, கடைவீதி, மணிக்கூண்டு, பழைய, புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பிரதான போக்குவரத்து சாலைகளில் கால்நடைகள் தினந்தோறும் சுற்றித்திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் திரியவிடும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் சீா்காழி நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, சீா்காழி நகா் பகுதியில் பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, நகராட்சி வளாகத்தின் ஒரு பகுதியில் அடைத்தனா்.
மாடுகளை தேடிவந்த உரிமையாளா்களிடம் ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ. ஆயிரமும், கன்றுகளுக்கு தலா ரூ. 500-ம் அபராதம் விதித்து, மீண்டும் சாலையில் விடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...