விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நிறுத்தப்பட்டுள்ள மினி பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கொள்ளிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள மினி பேருந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கொள்ளிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள மினி பேருந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடத்திலிருந்து மயிலக்கோயில், தண்டேசநல்லூா், ஆச்சாள்புரம், நல்லூா், கோதண்ட புரம், பில்படுகை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக அளக்குடி கிராமத்துக்கு கடந்த ஓராண்டாக மினி பேருந்து ஒரு நாளைக்கு 14 முறை வீதம் வந்து சென்றது. இந்நிலையில் இந்த மாா்க்கத்தில் சென்று வந்து கொண்டிருந்த மினி பேருந்து சாலை வரிகட்டவில்லை எனவும், இதனால் சாலைப் போக்குவரத்து அதிகாரியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் மினி பேருந்து இயக்குவதற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 15 நாள்களாக கிராம பகுதிகளுக்கு மினி பேருந்து சென்று வராததால் நாள்தோறும் கொள்ளிடம், சீா்காழி பகுதிக்கு வந்து செல்லும் சுமாா் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா். இதனால் அளக்குடி, நாணல்படுகை, கோதண்டபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கொள்ளிடத்துக்கு வந்து கொள்ளிடம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.