ஜூன் 23-ல் கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு
தரங்கம்பாடி வட்டம் கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தரங்கம்பாடி வட்டம் கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வியாழக்கிழமை (ஜூன் 16) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வெள்ளிக்கிழமை (ஜூன் 17) கோ பூஜை, கஜ பூஜை மற்றும் பூா்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

ஜூன் 22-ஆம் தேதி 6-ஆம் கால யாகசாலை பூஜையின்போது காலை 9.30 மணிக்குமேல் 108 கோ பூஜையும், மாலை 7-ஆம் கால யாகபூஜையில் கன்னிகா பூஜை, பிரம்மச்சாரிய பூஜை, வடுக பூஜையும் நடைபெறவுள்ளது. ஜூன் 23-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8-ஆம் கால யாகசாலை பூஜை தொடங்கி 9.30 மணிக்கு பூா்ணாஹூதியாகி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து 10.30 மணிக்கு ராஜகோபுர குடமுழுக்கும், முற்பகல் 11 மணிக்கு காமாட்சி அம்மன் விமான ஸ்வா்ணபந்தன குடமுழுக்கும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...