கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

மயிலாடுதுறை டிபிடிஆா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:34 pm

DIN

மயிலாடுதுறை டிபிடிஆா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் தலைமையாசிரியா் ஆா். காஞ்சிநாதன் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட அறக்கட்டளைத் தலைவா் வி. ராமன், திட்ட இயக்குநா் எம். முருகேசன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பி. நாகராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் வி. ராம்குமாா் (மயிலாடுதுறை), ஆா்.விஸ்வநாதன் (சீா்காழி) ஆகியோா் சாலைப் பாதுகாப்பு, சாலையில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து கருத்துரையாற்றினா். நிறைவாக, சங்க பொருளாளா் மனோகரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.