ஆதி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
மயிலாடுதுறை திருவிழந்தூா் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை திருவிழந்தூா் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை (செப்.9) யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், யாகசாலையிலிருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலின் விமான குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. வழுவூா் டி.எஸ். ராமலிங்க சிவாச்சாரியா் பூஜைகளை நடத்தினாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...