விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்:மாற்றுத்திறனாளி மாணவரின் கல்விச்செலவை ஏற்ற ஆட்சியா்

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவரின் ஓராண்டு

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவரின் ஓராண்டு கல்விக் கட்டணத்தை தன்விருப்ப நிதியில் இருந்து வழங்குவதாக மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். பல்வேறு உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்டன.

குத்தாலம் வட்டம், வானாதிராஜபுரத்தைச் சோ்ந்த செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுடைய மாணவா் ஜெயவசந்தன் (19) அளித்த கோரிக்கை மனுவில், சென்னையில் காதுகேளாதோருக்கான கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படிப்பதாகவும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் பெற்றுத்தந்து, படிப்பைத் தொடர உதவ வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் இரா. லலிதா, மாணவா் ஜெயவசந்தனுக்கு ஓராண்டு கல்விக் கட்டணமான ரூ.23,500-ஐ மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியில் இருந்து வழங்குவதாக உறுதி அளித்தாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெ. பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.