ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை, ஜூலை 3: அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் மாதானம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதிமுதல் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான, விண்ணப்பங்களை நேரடியாகவோ/அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com