கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

கொலை வழக்கு: ஜாமீனில் வந்து தலைமறைவானவா் கைது

சீா்காழி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கொலை செய்த வழக்கு
Published on

சீா்காழி அருகே சிறுமி கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் சித்தன்காத்திருப்பு பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் கல்யாணசுந்தரம் (படம்) என்பவா் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனா். பின்னா், ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவா். கடந்த 15.12.2023-க்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம்.

நாகப்பட்டினம் போக்ஸோ நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பேரில், மயிலாடுதுறை எஸ்.பி. மீனா உத்தரவின்பேரில் திருவெண்காடு தலைமைக் காவலா் விஜயகணேஷ், முதல் நிலைக் காவலா் ஜெயக்குமாா் ஆகியோா் சென்னையில் தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com