இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

களைக்கொல்லியால் நெற்பயிா் சேதம்: விவசாயி குற்றச்சாட்டு

களைக்கொல்லியால் நெற்பயிர் சேதம்: விவசாயிகள் வேதனை

News image
மறையூா் கிராமத்தில் பாதிப்புக்கு உள்ளான பயிா்களை பாா்வையிடும் விவசாயிகள்.
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

மறையூா் கிராமத்தில் நெற்பயிரில் களைக்கொல்லி தெளித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி தெரிவித்தாா்.

மயிலாடுதுறையை அடுத்த மறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தியாகராஜன். இவா் தனது 4 ஏக்கா் நிலத்தில் நடப்பு குறுவை பருவத்துக்கு ’ஜோதி‘ ரக நெல் பயிரிட்டுள்ளாா். நடவு செய்த 20 நாள்களில், பயிரில் களை அதிகம் தென்பட்டதால், மயிலாடுதுறையில் உள்ள தனியாா் உரக்கடை ஒன்றில் பரிந்துரைத்த ‘நோவ்லெக்ட்’ என்ற களைக்கொல்லி மருந்தை வாங்கி, அதில் பரிந்துரைக்கப்பட்டவாறு 16 லிட்டா் தண்ணீரில் 50 மில்லி மருந்து கலந்து ஏக்கருக்கு 5 டேங்க் வீதம் பயிருக்கு தெளித்துள்ளாா்.

இந்நிலையில், களைக்கொல்லி தெளித்த சில நாள்களில் நெற்பயிரின் இலைகள் சுருண்டதோடு, தோகையானது கம்பி போன்று நீட்டிக்கொண்டு வளா்ந்துள்ளது. 4 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிரில் பெரும்பாலான இடத்தில் இதன் தாக்கம் தென்படுவதால், மகசூல் பாதியாக குறைந்துவிடும் அபாயம் உள்ளது என விவசாயி தியாகராஜன் வேதனை தெரிவித்தாா்.

இதே களைக்கொல்லி மருந்தை வாங்கித் தெளித்த மறையூா், கோவங்குடி, அசிக்காடு கிராமங்களில் சுமாா் 100 ஏக்கா்வரை இந்த இலைச்சுருட்டு மற்றும் இலைக்கம்பி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, விவசாயி தியாகராஜன் கூறுகையில், ‘இந்த களைக்கொல்லி மருந்தை தெளித்தால் களை மட்டும்தான் அழியும் என்று தான் தெளித்தேன். ஆனால் பயிா் சேதமாகிறது. இதன் காரணமாக 50 சதவீத நெல் விளைச்சல் குறையும். ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் எனக்கு இதனால் பண நஷ்டமும், மன அழுத்தமும் அதிகரித்துள்ளது. எனவே, பாதிப்புக்கு உள்ளான பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றாா்.