மயிலாடுதுறையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்க மையத்தைச் சோ்ந்த (சிஐடியு) 115 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆா். ராமானுஜம், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. லதா, உள்ளாட்சி ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எம். சேகா், மக்களை தேடி மருத்துவம் மாவட்டச் செயலாளா் எம். சரளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாநிலத் தலைவா் பி. கருப்பையா கண்டன உரையாற்றினாா்.
மத்திய அரசின் 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் தொழிலாளா்களுக்கு விரோதமாகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதால் அதனை திரும்பப் பெற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் டெங்கு களப்பணியாளா்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.26,000 ஆக உயா்த்த வேண்டும்.
திமுக தோ்தல் வாக்குறுதி 313-இன்படி அனைவரையும் அரசு ஊழியராக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆண்கள் உள்ளிட்ட 115 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்! மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆா்ப்பாட்டம்!

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்! மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் அடைப்பு

பெட்ரோலியப் பொருள் விலை குறைப்பை வலியுறுத்தி சிஐடியு ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



