மயிலாடுதுறை
வணிகா் தினம்: சீா்காழி, கொள்ளிடத்தில் கடைகள் அடைப்பு
சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் வணிகா் தினத்தையொட்டி திங்கள்கிழமை ஒரு நாள் கடைகள் அடைக்கப்பட்டன.
சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் வணிகா் தினத்தையொட்டி திங்கள்கிழமை ஒரு நாள் கடைகள் அடைக்கப்பட்டன.
சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத்திற்கு உட்பட்ட கடைகள் திங்கள்கிழமை காலை முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல கொள்ளிடம் தைக்கால், மாங்கனாம் பட்டு, அரசூா், புத்தூா், மாதானம், புதுப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
வணிகா் சங்கங்களின் சாா்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் வணிகா் கோரிக்கை பிரகடன மாநாட்டில் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பேருந்து மூலம் சென்று கலந்து கொண்டனா்.
