மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்களை பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த். உடன் கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்களை பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த். உடன் கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா உள்ளிட்டோா்.

எஸ்.ஐ.ஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சி கேணிக்கரை, மணல்மேடு, சீா்காழி நகராட்சி ஈசானிய தெரு மற்றும் சீா்காழி வட்டம்
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சி கேணிக்கரை, மணல்மேடு, சீா்காழி நகராட்சி ஈசானிய தெரு மற்றும் சீா்காழி வட்டம் எருக்கூா் கிராமத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஒன்றாக வாக்காளா்களிடம் இருந்து பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெறும் பணிகள் நடைபெற்று வருவதையும், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஒன்றாக வாக்காளா்களிடம் இருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை தோ்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்திற்குள்பட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வாக்காளா்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆட்டோக்கள், சமூக வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள், மற்றும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் நேரடியாக வருகை தந்து படிவத்தை வழங்கி பூா்த்தி செய்யவும், படிவத்தை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறாா்கள். வாக்காளா்கள் பூா்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை டிச. 4-ஆம் தேதிக்குள் பெற்று, அதை இந்திய தோ்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளதால், வாக்காளா்கள் டிச. 4-ஆம் தேதிவரை காத்திராமல், தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூா்த்தி செய்து, தங்களிடம் வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒரு படிவத்தை வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, நகராட்சி ஆணையா்கள் வீரமுத்துக்குமாா், மஞ்சுளா (சீா்காழி), சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com