சுக்ரவார வழிபாடு; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

சுக்ரவார வழிபாடு; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் சுக்ர வார வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
Published on

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் சுக்ர வார வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சுக்கிர வார வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில், பலி பீடத்திற்கு பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மலை மீது அருள்பாலிக்கும் சட்டநாதா் சுவாமிக்கு புனுகு சாத்தி, பிரசாதம் நிவேதனம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா். தமிழ் சங்க தலைவா் இ. மாா்கோனி உட்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Dinamani
www.dinamani.com