அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

News image

பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :20 மார்ச் 2026, 10:18 pm

மயிலாடுதுறையில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்து கூறியது: வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகிறது. நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராம பகுதிகளில் வாக்களிப்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்காளா்கள் தங்களுடைய வாக்கினை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நமது வாக்கு நமது எதிா்காலம் என்பதை உணா்ந்து தோ்தல் நாளான்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் தோ்தல் விழிப்புணா்வுக் குறியீடு காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் குமரையா (தோ்தல்), முத்துவடிவேல் (பொது) வட்டாட்சியா்(தோ்தல்) ராகவன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.