வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கெயில் நிறுவனம் சார்பில் நிறுவப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் மற்றும் எய்ட்ஸ் நோய் கண்டறியும் பரிசோதனை ஆய்வகம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கெயில் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.2.65 லட்சம் மதிப்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் எய்ட்ஸ் நோய் கண்டறியும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே முறையில் 90-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் முடிவுகளை பெறமுடியும்.
ஆய்வகத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அர.சங்கர் தொடங்கி வைத்தார். கெயில் இந்தியா நிறுவன (சென்னை) முதன்மை மேலாளர்கள் டி.எஸ்.விஸ்வநாதன், எம்.ரவிச்சந்திரன், உதவி மேலாளர் பி.எல்.கோடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ஒய்.அக்பர் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜரெத்தினம், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


