ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என, மூத்த குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என, மூத்த குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவையின் 14-ஆம் ஆண்டு தொடக்க விழா, அதன் தலைவர் அம்பாள் பி.குணசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செயலாளர் ஆ.பக்கிரிசாமி, பொருளாளர்  ஆர்.குழந்தைவேலு, ஆலோசகர் என்.குமரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில், செம்போடை நேதாஜி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் வி.ஜி.சுப்பிரமணியனின் சேவையைப் பாராட்டி, அவருக்கு மனித நேய மருத்துவ மாமணி என்ற பட்டமும், புலவர் ஆதி.நெடுஞ்செழியனுக்கு முத்தமிழ் முழுநிலவு வித்தகர் என்ற பட்டமும், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ.மீனாட்சிசுந்தரத்துக்கு முதியோர் திலகம் என்ற பட்டம் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.தென்னரசு, தலைமையாசிரியர் புயல்.குமார், மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பு நிறுவனர் டி.வி.ராமமூர்த்தி, துணைத் தலைவர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
பள்ளிகளில் சிறப்பிடங்கள் பெற்ற உறுப்பினர்களின் பேரன், பேத்திகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
 மேலும், திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். வேதாரண்யம் நூலகத்துக்கு நிரந்தரமாக புதிய கட்டடம் கட்ட வேண்டும். கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.