நாகை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக பிரம்மபுரீசுவரர் சுவாமி, திருநிலைநாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்- நாயகி எழுந்தருளி பிராகார உலா நடைபெற்றது.
இதேபோல், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலிலும், திருப்புன்கூர் சிவலோகநாதசுவாமி கோயிலிலும், திருக்கோலக்கா தாளபுரீசுவரர்சுவாமி கோயிலிலும், சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







