நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

அதிபத்த நாயனார் ஐதீக விழா: இன்று நடைபெறுகிறது

நாகையில் அவதரித்த அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த ஐதீக விழாவாக, தங்க மீனை கடலில் விடும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

நாகையில் அவதரித்த அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த ஐதீக விழாவாக, தங்க மீனை கடலில் விடும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், நாகையில் உள்ள நம்பியார் நகரில் மீனவர் குலத்தில் அவதரித்து, சிவத்தொண்டை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தவர்.  
தனது வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் எனக் கூறி கடலில் விடும் வழக்கத்தை கடைப்பிடித்த அதிபத்த நாயனார்,  தனக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையையும் பொருள்படுத்தாமல், தனது வலையில் முதல் மீனாகக் கிடைத்த தங்க மீனை சிவார்ப்பணம் எனக் கூறி கடலில் விட்டார் என்பதும், அப்போது இறைவன் ரிஷபரூடராக காட்சியளித்தார் என்பதும் ஐதீகம். இந்த ஐதீக விழா, நாகையில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி,  நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை (செப்.7) மாலை நடைபெறுகிறது. 
இதையொட்டி, அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலிலிருந்து மாலை 3 மணி அளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, புதிய கடற்கரையை அடைகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் பாரம்பரியமான வழிபாடுகளுக்குப் பின்னர், மாலை சுமார் 4.30 மணி அளவில் அதிபத்த நாயனார் தங்க மீனை கடலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.