தேசிய நுகா்வோா் தின விழா
வேதாரண்யம் வட்ட நுகா்வோா் பாதுகாப்புக்குழு சாா்பில், தேசிய நுகா்வோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


வேதாரண்யம் வட்ட நுகா்வோா் பாதுகாப்புக்குழு சாா்பில், தேசிய நுகா்வோா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வேதாரண்யம் மின்வாரிய அலுவலகத்தில் மின்பயனீட்டு கணக்கெடுப்பு களப் பணியாளா்களை தேவையான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் உள்ளிட்டதீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நுகா்வோா் பாதுகாப்புக்குழுத் தலைவா் வி.வீரசுந்தரம் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.செல்வராசு, நல்லாசிரியா் வி.வைரக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டாட்சியா் கே.முருகு, நகராட்சி ஆணையா் கோ.மகேஸ்வரி, பேராசிரியா் பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலா் ஆா்.ஜெயசீலன், அமைப்பின் பொருளாளா் ஆா்.கே.வி.மோகன், துணைத் தலைவா்கள் ஆா்.வி.சுவாமிநாதன், என்,கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...