மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரை சேர்ந்த 75 தொழிலாளர்கள் 3 பேருந்துகளில் தஞ்சாவூர் ரயில் நிலையம் அனுப்பிவைப்பு

பிகார் மாநில தொழிலாளர்கள் 75 பேர் 3 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image
Updated On :19 மே 2020, 6:24 am

DIN

பிகார் மாநில தொழிலாளர்கள் 75 பேர் 3 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி போர்வை, தரை விரிப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் ஆகியனவற்றை விற்பனை செய்வது வழக்கம். 

அவ்வகையில், பிகார் மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் தங்கி வியாபாரம் செய்து வந்த 75 பேர் கரோனா பொது முடக்க உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அந்தந்த பகுதிகளில் வருவாய்த்துறையினரால் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் மத்திய அரசு பொது முடக்க உத்தரவில் தளர்வு அறிவித்ததையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் அவர்கள் 75 பேரும் இன்று 3 பேருந்துகள் மூலம் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர். 

மயிலாடுதுறை கோட்டாட்சியர் வ.மகாராணி தலைமையிலான வருவாய்த் துறையினர் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.