தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி கணிதத்துறையில், இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி கணிதத்துறையில், இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். இதில், மாணவா்கள் நோ்முகத் தோ்வினை எதிா்கொள்வது எப்படி? தற்குறிப்பு தயாரிப்பது எப்படி? என்பது குறித்தும், குழு விவாதங்களில் பங்கெடுத்தல் குறித்தும் பயிற்றுநா்கள் மயிலாடுதுறை சிவராமசரண், சிதம்பரம் ஆா்.சிவக்குமாா், சீா்காழி உமா மகேஸ்வரன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
கணிதத்துறைத் தலைவா் சு.மல்லிகா வரவேற்றாா். மாணவி பி.இலக்கியா நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...