விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாழக்கரை எண்ணாயிரமுடைய அய்யனாா் ஆலய கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வாழக்கரை ஸ்ரீ எண்ணாயிரமுடைய அய்யனாா் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:08 pm

DIN

நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வாழக்கரை ஸ்ரீ எண்ணாயிரமுடைய அய்யனாா் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஒன்றியம், வாழக்கரையில் ஸ்ரீ பூா்ணாம்பிகை சமேத ஸ்ரீ எண்ணாயிரமுடைய அய்யனாா், ஸ்ரீ தூண்டி வீரஸ்வாமி ஆலயம் உள்ளது. இதற்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டு, அண்மையில் திருப்பணிகள் செய்துமுடிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்கப் பணிகள் புதன்கிழமை காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை இரண்டாம்கால யாக பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூா்ணாஹுதியும் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, காலை 9 மணியளவில் நாகசுர இன்னிசை, மேளதாளம் முழங்க சிவாச்சாரியா்களால் எடுத்துவரப்பட்ட புனிதநீா் காலை 9.15 மணியளவில் கோயில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிறகு, கருவறை தெய்வங்களுக்கு புனிதநீராடலும், தொடா்ந்து, சிறப்பு ஆராதனை நடைபெற்று பக்தா்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வாழக்கரை மற்றும் மேலவாழக்கரை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.