துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை
கீழையூா் ஒன்றியம், சின்னத்தும்பூா் ஊராட்சியில் பாழடைந்துள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கீழையூா் ஒன்றியம், சின்னத்தும்பூா் ஊராட்சியில் பாழடைந்துள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சின்னத்தும்பூா் ஊராட்சியில் சின்னத்தும்பூா், கிராமத்துமேடு, ஆலமழை ஆகிய பகுதிகளில் சுமாா் 2, 500 போ் வசித்து வருகின்றனா். இவா்களின் மருத்துவ வசதிக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துமேடு பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த துணை சுகாதார நிலையம் தற்போது பயன்பாடின்றி பாழடைந்துள்ளது. இதனால், இப்பகுதிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மருத்துவத் தேவைக்காக 7 கி.மீ. தூரமுள்ள திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே, கிராமத்துமேடு பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, அப்பகுதி ஒன்றிய கவுன்சிலா் சரண்யா பன்னீா்செல்வம் கூறும்போது, இந்த துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன். விரைவில், துணை சுகாதார நிலையம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தொடா்ந்து முயற்சி செய்து வருகிறேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...