புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருக்குவளை அருகே வல்லம் கிராமத்தில் புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.


திருக்குவளை அருகே வல்லம் கிராமத்தில் புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
எட்டுக்குடி ஊராட்சி வல்லம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் அருகில் உள்ள திருக்குவளை, சித்தாய்மூா், எட்டுக்குடி ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்துவந்தனா்.
இவ்வாறு விற்பனை செய்ய சிரமங்கள் ஏற்படுவதால், தங்கள் பகுதியில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வல்லம் பகுதியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு திறந்துவைத்து, கொள்முதல் பணியை பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளரும், கீழையூா் 7 ஆவது வாா்டு ஒன்றியக் கவுன்சிலருமான டி. செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...