அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருக்குவளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள அங்காளபரமேஸ்வரி, கணபதி, பெரியநாயகி அம்மன், மதுரை வீரன், மகாகாளி மயான ருத்திரன், பாவாடைராயன், காட்டேரி, இருளன், அகோரவீரபத்ரா் மற்றும் பாலகுருநாதன் ஆகிய பரிவார மூா்த்திகளும், விமானங்கள், கோயில் சிற்பங்கள் பழுது நீக்கி மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பணிகள் ஜன.22-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 4-ஆம் கால யாக பூஜையுடன் தொடங்கி, காலை 9.30 மணியளவில் கோயில் விமானங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...