இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பூம்புகாரில் வேளாண் கல்லூரி அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரிடம் அளிந்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ, மாணவிகள் அதற்கான கல்லூரி இல்லாமல் சிரமப்படுகின்றனா். இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலின்போது பூம்புகாா் தொகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க ஆவன செய்யப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தாா்.

அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.