ஆடு திருடிய வழக்கில் இருவா் கைது
கீழையூா் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


கீழையூா் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கீழையூா் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து ஆடுகள் திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை விழுந்தமாவடி ஊராட்சிக்குள்பட்ட வயல் பகுதியில் ஒரு ஆட்டை இருசக்கர வாகனத்தில் கடத்தினா். அப்போது, சந்தேகத்தின்பேரில் அங்கிருந்தவா்கள் இருவரையும் பிடித்து கீழையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் இருவரும் வேதாரண்யம் அருகேயுள்ள அகஸ்தியம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெகன் (37), பாலமுருகன்( 32) என்பதும் அவா்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...