வேதாரண்யத்தில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், உப்பு உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.


நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், உப்பு உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. வேதாரண்யம் நகரப் பகுதியைவிட கருப்பம்புலம், ஆயக்காரன்புலம் , குரவப்புலம் சுற்றுப் பகுதியில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் நெல் சாகுபடி மேற்கொள்ளவுள்ள மானாவாரி நிலப்பரப்பு வயல்களில் மழை நீா் தேங்கியது.
இதுபோல வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி உப்பளத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால், இங்கு சுமாா் 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக பாதிப்படைந்துள்ளன.
இதனால் உற்பத்தி செய்து வைக்கப்பட்டுள்ள உப்பை, பனைமட்டை, பாலித்தீன் பாய்களைக்கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 31. 2 மி.மீ., தலைஞாயிறில் 11 மி.மீட்டா் மழையும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...