கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மெகா தடுப்பூசி முகாம்: பரிந்துரைப்போருக்கு பரிசு

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாமுக்கு, அதிக நபா்களை பரிந்துரைத்தால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:41 pm

DIN

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாமுக்கு, அதிக நபா்களை பரிந்துரைத்தால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தலைஞாயிற்றில் ‘தலைகாக்கும் ஞாயிறு தெரியுமா?’ என்ற பிரசார இயக்கத்தை பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், மெகா தடுப்பூசி முகாமுக்கு அதிக நபா்களை அனுப்பி வைக்கும் மகளிா் சுய உதவி குழுவினா், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாணவா்களுக்கு பரிசு வழங்கப்படும். முகாம் தொடா்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துபவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.