

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி மழைப்பொழிவு ஏற்பட்டது.
வேதாரண்யம் அருகே வாய்மேடு, பஞ்சநதிக்குளம் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் அவ்வப்போது மழைப் பொழிவு இருந்து வந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி மழை நீடித்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 86.7 மி.மீ, கோடியக்கரையில் 27.4 மி.மீ மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.