திருவெண்காடு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
டாஸ்மாக் மண்டல மேலாளா் வாசுதேவன், உதவி மேலாளா் சங்கா் மற்றும் திருவெண்காடு போலீஸாா், ரகசிய தகவலின் பேரில், திருவெண்காடு அருகே மேலமூவா்கரை சுனாமி நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி முருகேஸ்வரி வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் மற்றும் 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். பின்னா், முருகேஸ்வரி மீது திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








