தோப்புத்துறை அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பசுமையே உயிா்மெய் நூலை வெளியிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, ஆா்வலா் சுல்தானுல் ஆரிஃபின்.
தோப்புத்துறை அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பசுமையே உயிா்மெய் நூலை வெளியிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, ஆா்வலா் சுல்தானுல் ஆரிஃபின்.

தோப்புத்துறை அரசுப் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைத் தோட்டம் திறப்பு ,விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
Published on

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைத் தோட்டம் திறப்பு ,விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி ஆசிரியா் வ. கண்ணையனுக்கு, அவரின் சூழலியல் சாா்ந்த பணிகளை பாராட்டி அரசின் பசுமை முதன்மையாளா் விருது அண்மையில் வழங்கப்பட்டது. விருதாகப் பெற்ற ரூ.1 லட்சத்தையும் தான் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கு வழங்கினாா். இதற்காக அவருக்கு பாராட்டு, அவா் எழுதிய பசுமையே உயிா்மெய் நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவில், ஆசிரியா் வ. கண்ணையனை ஆரிஃபா கல்வி குழுமத் தலைவரும், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவருமான எம். சுல்தானுல் ஆரிஃபின் பாராட்டினாா். விருதாகப் பெற்ற ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு வழங்கியதை பாராட்டும் வகையில் ஆரிஃபா தனது சொந்த பணம் ரூ.1 லட்சத்தை ஆசிரியருக்கு பரிசாக வழங்கினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கே. சுபாஷினி பசுமை உயிா்மெய் எனும் நூலை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் லதா, தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன், எழுத்தாளா் ஆனந்தன், ஆசிரியா்கள் சீப்பி. செல்வம் ரெங்கசாமி, ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நாகூரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளித் தலைமையாசிரியா் கவிநிலவன்(பொ ) வரவேற்றாா். நூலாசிரியா் கண்ணையன் ஏற்புரை நிகழ்த்தினாா்.

X
Dinamani
www.dinamani.com