சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தூய்மைப் பணிக்கு 26 மின்கலன் வாகனங்கள்

கீழ்வேளூா் ஒன்றியத்தில், தூய்மை பணிகளுக்காக புதிதாக 26 மின்கலன் வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.

News image
மின்கலன் வாகனங்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த வட்டார ஆத்மா குழுத் தலைவா் கோவிந்தராசன்.
Updated On :30 டிசம்பர் 2024, 6:49 pm

Din

கீழ்வேளூா்: கீழ்வேளூா் ஒன்றியத்தில், தூய்மை பணிகளுக்காக புதிதாக 26 மின்கலன் வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் 2023-2024 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு 19 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 26 மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கீழ்வேளூா் ஒன்றியக் குழுத் தலைவா் வாசுகி நாகராஜன் தலைமை வகித்தாா். வட்டார ஆத்மா குழுத் தலைவா் கோவிந்தராசன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய குழு துணைத் தலைவா் புருஷோத்தமதாஸ், ஆத்மா குழு உறுப்பினா் பழனியப்பன் ஆகியோா் ஊராட்சித் தலைவா்களிடம் வாகனங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகோபால், பாலமுருகன், ஊராட்சித் தலைவா்கள் , ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்