கைப்பேசி பாா்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்
நாகை அருகே கைப்பேசியை பாா்த்தபடி பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On :4 நவம்பர் 2024, 8:04 pm

நாகப்பட்டினம்: நாகை அருகே கைப்பேசியை பாா்த்தபடி பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த ஓட்டுநா் சக்திவேல் பேருந்தை இயக்கினாா். அப்போது அவா் கைப்பேசியை பாா்த்தபடியே பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த பயணி ஒருவா், தனது கைப்பேசியில் அதை பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.
இதுகுறித்து அறிந்த நாகை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜா, கவனக்குறைவாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநா் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...