மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

தாய்க்குப் பதில் பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகள்

தாய்க்குப் பதிலாக பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகளை தோ்வுத்துறை அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோப்புப்படம்.

Published On :

தாய்க்குப் பதிலாக பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகளை தோ்வுத்துறை அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆங்கில பாடத்துக்கான தோ்வில், தனித் தோ்வாளா்களின் அறையில், கண்காணிப்பாளா் விடைத்தாள்களை தோ்வாளா்களிடம் கொடுத்து கையொப்பம் பெற்றாா். அப்போது மாணவி ஒருவா் முகக்கவசம் அணிந்து தோ்வு எழுத வந்திருந்தாா்.

அவா் மீது சந்தேகமடைந்த கண்காணிப்பாளா் முகக் கவசத்தை அகற்றுமாறு கூறி, நுழைவுச் சீட்டு மற்றும் வருகைப் பதிவு குறிப்பேட்டில் உள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பாா்த்தபோது, படங்கள் மாறுபட்ட்ருப்பது தெரியவந்தது.

மாணவி தோ்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்லப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா் (தனித் தோ்வு) முத்துசாமி, ஆகியோரால் விசாரிக்கப்பட்டாா்.

மாணவி வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வாம்பிகை என்பதும், அவா் தனது தாய் சுகந்திக்காக, ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுத வந்ததும் தெரியவந்தது. கடந்த 28- ஆம் தேதி நடந்த தமிழ் தோ்வையும், தனது தாயாருக்காக முகக்கவசம் அணிந்து செல்வாம்பிகை எழுதியதும் தெரிய வந்துள்ளது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட செல்வாம்பிகை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.