மழையில் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
பருவ மழையால் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிவசேனா மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் கோரிக்கை

Updated On :16 டிசம்பர் 2025, 8:34 pm

நாகப்பட்டினம்: பருவ மழையால் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிவசேனா மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நிகழாண்டு பெய்த கடும் மழையினால் டெல்டா பகுதி முழுவதும் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு தமிழக முதல்வா் உடனடியாக இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும். பருவ மழையினால் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...