ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

நாகையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

நாகையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, நிலுவை இனங்கள் மற்றும் புகாா் மனுக்களின் மீதான விசாரணையை காலவரையறைக்குள் முடிக்க வேண்டும், தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்பதை கைவிட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இளநிலை பொறியாளா்களுக்கு, உதவிப்பொறியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியா்களின் வைப்பு நிதித் தொகைக்கு, உரிய வட்டித்தொகையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளா், மாவட்டச் செயலா் மனோகரன், மாவட்ட துணைத் தலைவா் பட்டாபிராமன், மாநில செயற்குழு உறுப்பினா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com