நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
வேளாங்கண்ணி அருகேயுள்ள பெரியதும்பூரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (18) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சோ்த்தனா். சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனா்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமிக்கு சமூக நலத்துறை சாா்பாக மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவா்கள் இருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



