100 நாள் தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

100 நாள் தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
Published on

100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேதாரண்யத்தில், கோட்டாட்சியா் அமித்குப்தா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தாமரைப்புலம் இருளப்பன்: 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை நெல் உற்பத்தி சாா்ந்த வேளாண் தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள வகை செய்ய வேண்டும்.

தகட்டூா் வீரப்பன்: தகட்டூரில் அமைந்துள்ள நொச்சிக் கோட்டகம் ஏரி கரையை பலப்படுத்தி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைஞாயிறு கமல்ராம்: தலைஞாயிறு பகுதியில் மழை வெள்ளத்தால் குறுவைப் பருவ நெல் சாகுபடி பாதிப்புக்கு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

தங்க. குழந்தைவேலு: தென்னடாா் ஊராட்சியில் கடந்த மாா்ச் பருவத்தில் மேற்கொள்ளப்பட்டு பருவம் தவறிய மழையால் பாதிப்புக்குள்ளான எள் சாகுபடிக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், அதிகாரிகளின் தவறான புள்ளி விவரத்தால் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லை.

ரவி: வண்டுவாஞ்சேரியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பராமரிக்கப்படும் அரசு பண்ணைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கிட வேண்டும்.

முருகதாஸ்: வண்டல் கிராமத்தில் இறால் பண்ணைகளால் பாதிப்புக்குள்ளான குறுவைப் பருவ நெல் சாகுபடிக்கு நிவாரணம் வேண்டும்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு முள்ளியாறு, மானங்கொண்டானாறுகளில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com