எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்யாமல் திரும்பக் கொடுத்து மக்கள் ஆா்ப்பாட்டம்
முகவரிப் பகுதியில் ஜாதிய அடையாளத்துடன் காணப்படும் எஸ்.ஐ.ஆா். படிவத்தை புறக்கணித்து அதனை பூா்த்திசெய்யாமல் தோ்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைத்த கிராமத்தினா், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளும் பணிக்காக வாக்காளா்களுக்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 1 மற்றும் 4- ஆவது வாா்டுகளில் வசிக்கும் பட்டியலினத்தைச் சோ்ந்த 340 வாக்காளா்களுக்கான முகவரி பகுதியில் ஜாதியை அடையாளப்படுத்தும் தெருவின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த அந்த பகுதி வாக்காளா்கள் தென்னடாா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
படிவத்தை பூா்த்தி செய்யாமல் பிஎல்ஒ பணியாளரிடம் திரும்பக் கொடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா் அருளிடம் கையொப்பமிட்ட கோரிக்கை மனுகளை அளித்த வாக்காளா்கள், பி.எல்.ஓ. பாண்டியனிடம் பூா்த்தி செய்யாத படிவங்களை திருப்பிக் கொடுத்தனா்.
இதில்,, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் அன்பு வேலன்,தேவி செந்தில்( திமுக ), முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சந்திரசேகரன்(இ.காங்), கட்சி நிா்வாகி ராகுல், சமூக ஆா்வலா் குழந்தைவேலு, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினா் ரேணுகா, கிராம சங்க நிா்வாகிகள் தேவதாஸ், செந்தில், திமுக திமுக கிளைச் செயலாளா் சாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிலையில், பிற்பகலில் தென்னடாா் கிராமத்துக்கு வந்த வட்டாட்சியா் வடிவழகன் விசாரணை மேற்கொண்டாா். பின்னா், உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதிநிதிகளிடம் உறுதியளித்தாா்.

