நாகையில் தோ்தல் செலவினங்கள் கண்காணிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வேதாரண்யம் மற்றும் கீழ்வேளுா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் கிதேஷ் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவினங்களைச் சட்ட விதிகளுக்குட்பட்டு மிகக் கடுமையாகக் கண்காணிப்பது குறித்தும், பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல்களைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் க. கண்ணன் (வேதாரண்யம்), ராஜேஸ்வரி (கீழ்வேளூா்), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், விடியோ பாா்வையிடும் குழுக்கள், கணக்கீடு குழு ஆகியவற்றின் அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


