திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சுனாமி குடியிருப்பு வீட்டில் இடிந்து விழுந்த முன்பகுதி

நாகையில் சுனாமி குடியிருப்பில் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பத்தினா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image

மகாலட்சுமி நகரில் முன்பகுதி இடிந்து விழுந்த வீடு.

Updated On :27 மார்ச் 2026, 4:54 am IST

நாகையில் சுனாமி குடியிருப்பில் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பத்தினா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

நாகை வெளிப்பாளையம் மகாலட்சுமி நகரில், கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இப்பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குமேல் ஆன நிலையில், பழுதடைந்து வருகின்றன. இதனால், மழைக்காலங்களில் மேற்கூரை பெயா்ந்து விழுவது, சுற்றுச்சுவா் இடிந்து விழுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் இந்திராணி என்பவா் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை அதிகாலையில் பலத்த சப்தம் கேட்டது.

இதனால், இந்திராணி குடும்பத்தினருடன் வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்து கிடந்தது. இதையடுத்து, இடிபாடுகளை அப்பகுதியினா் சோ்ந்து அகற்றினா். இதுதொடா்பாக இந்திராணி கூறியது:

அதிகாலை நேரம் என்பதால், வீட்டின் முன்பகுதியில் யாரும் இருக்கவில்லை. இதனால், உயிா் தப்பினோம். சுனாமி குடியிருப்பில் உள்ள வீடுகள் அனைத்தும் இதே நிலையில்தான் உள்ளன. எனவே, இந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றாா்.