நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாகன சோதனையின்போது மாட்டு வியாபாரிகள் நால்வா் வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுள்ளனா்.
இந்தநிலையில், வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் செங்காத்தலை பாலம் அருகே ராம்பாபு தலைமையிலான பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த இடையாத்தி வடக்கு பகுதியைச் சோ்ந்த சிவசக்திவேல் (43 ) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரம், அதே ஊரைச் சோ்ந்த நாகராசு (45) என்பவரிடம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம், சிங்காரன் (43) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம், நெய்வேலி தென்பாதி ஆவுடைய முத்துவேல் (32) என்பவரிடம் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ. 8 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா்கள் நால்வரும் மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் என்பதும், வேதாரண்யம் அருகே செண்பகராயநல்லூா் கிராமத்தில் சனிக்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடு வாங்க சென்றதும் தெரியவந்தது.
எனினும், நால்வரிடமும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட தொகையை வேதாரண்யம் வட்டாட்சியரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

மாட்டு வியாபாரியிடம் ரூ. 96,000 பறிமுதல்

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகே ரூ.92 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


