வெள்ள பாதிப்புகள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மன்னார்குடி வட்டம், துண்டக்கட்டளை கிராமத்துக்குள்பட்ட கைலாசநாதர் கோவில் தெருவில் உள்ள வடிகால் வாய்க்கால் கரையோர பகுதிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், கரைகளைப் பலப்படுத்தவும்,  வாய்க்கால் ஓரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி மழைநீர் தடையின்றி வடிவதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அந்த கிராமத்தில் உள்ள முதன்மை பொறுப்பாளர்களிடம் பேரிடர் காலங்களில் முழு ஈடுபாட்டுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டு,  குறித்த நேரத்தில் மண்டல அலுவலர்களுக்கும், வட்டார ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, மூன்றாம் சேத்தி ஊராட்சிக்குள்பட்ட காசாங்குளம், தாழங்காட்டு தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்காலையும், கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட கோம்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு, வெள்ளத்தடுப்பு கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வட்டாட்சியரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுகளுக்குப் பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் 212 பகுதிகள் பருமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக 225 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், முதல் நிலைப் பொறுப்பாளர்களாக நீச்சல் வீரர்கள், மரம் ஏறுபவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய 3,180 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவ மழை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வசுரபி, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com